'ஜெய்பீம்' படம் பார்த்ததும் குற்ற உணர்ச்சியாகவும் வெட்கமாகவும் இருந்தது: சித்தார்த்
- IndiaGlitz, [Wednesday,November 03 2021]
சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் நேற்று அமேசான் ஓடிடியில் வெளியான ’ஜெய்பீம்’ படத்தை திரையுலகினரும் அரசியல் பிரபலங்களும் பொதுமக்களும் கொண்டாடி வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ’ஜெய்பீம்’ படத்தை பார்த்து நடிகர் சித்தார்த் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
’ஜெய்பீம்’ படம் பார்த்து முழுக்க முழுக்க அழுதேன். என் இதயம் வலித்தது. படம் பார்த்து முடிந்ததும் குற்ற உணர்ச்சியாகவும், வெட்கமாகவும் இருந்தது. இந்த படத்தை தயாரித்த ஜோதிகா, சூர்யாவுக்கு பாராட்டுக்கள். ஒரு முன்னணி நடிகர் தன்னை பற்றி மட்டும் அல்லாத சிறந்த படத்தை எப்படி அளிக்கலாம் என்பதை சூர்யா நிரூபித்துவிட்டார்.
இப்படி ஒரு முக்கியமான படத்தை இயக்கிய ஞானவேலுக்கு நன்றி. மொத்த படமும் லிஜோமோல் தோள்களில் தான் உள்ளது. அவரின் கண்கள் செங்கனியின் வாழ்க்கையை பற்றி பேசியது மிக அருமை. பிரகாஷ்ராஜ், மணிகண்டன் உள்பட படக்குழுவினர் ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர்கள். ஜெய்பீம் வந்ததில் பெருமையாக இருக்கிறது. தமிழ் சினிமாவுக்கு என்ன ஒரு வெற்றி என பதிவு செய்துள்ளார்.
I wept throughout #JaiBhim. My heart was in pain. I felt guilty and ashamed. Hats off to Jyo and @Suriya_offl for producing this picture. Suriya has shown how a top star can make a great film that is not about only them.
— Siddharth (@Actor_Siddharth) November 3, 2021
Deepest heartfelt thanks to @tjgnan for crafting such an important film.
— Siddharth (@Actor_Siddharth) November 3, 2021
The whole film sits on young Lijomols shoulders. Her eyes tell the life of Sengani. Amazing mole. Also, bravo Manikandan! Every single cast and crew member deserves congrats.
So proud we have made #JaiBhim. Hope we can reach this film as well as the awareness it raises against oppression to the marginalised Irular tribes.
— Siddharth (@Actor_Siddharth) November 3, 2021
What a win for Tamil cinema.
Jai Bhim is love.
Jai Bhim is light.