சித்தார்த் நடிக்கும் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,October 03 2017]

கடந்த ஆண்டு வெளியான சித்தார்த் நடித்த 'ஜில் ஜங் ஜக்' படத்தை அடுத்து அவர் நடித்து வரும் அடுத்த படத்தின் டைட்டில், ஹீரோயின் மற்றும் பிற விபரங்கள் தற்போது வெளிவந்துள்ளது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் தயாராகி வரும் த்ரில் படம் ஒன்றில் சித்தார்த் நடித்து வருகிறார். இந்த படத்தின் தமிழ் பதிப்பிற்கு 'அவள்' என்றும் இந்தி பதிப்பிற்கு 'தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்' என்றும் தெலுங்கு பதிப்பிற்கு 'குருஹம்' என்றும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சித்தார்த் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்

சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல்குல்கர்னி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் மிலந்த் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் நவம்பரில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.