close
Choose your channels

சித்தார்த் - அருண்குமார் படத்தின் டைட்டில்-பர்ஸ்ட் லுக் அறிவிப்பு..!

Monday, April 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சித்தார்த் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் அருண்குமார் இயக்க இருப்பதாகவும், இந்த படத்தை சித்தார்த் தயாரிக்க இருப்பதாகவும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் உருவான ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதன் பிறகு அவர் பல திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது ’இந்தியன் 2’ உள்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ’அவள்’ ’காதலில் சொதபோது எப்படி’ ’ஜில் ஜங் ஜக்’ ஆகிய மூன்று படங்களை தயாரித்து உள்ள நடிகர் சித்தார்த் நான்காவதாக ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை விஜய் சேதுபதி நடித்த ’பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்க இருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டைட்டில் ’சித்தா’ என்று வைக்கப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்க உள்ளார் என்பதும் இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயனின் ’கனா’ உள்பட ஒரு சில படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment