சித்தார்த் - அருண்குமார் படத்தின் டைட்டில்-பர்ஸ்ட் லுக் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Monday,April 17 2023]

நடிகர் சித்தார்த் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் அருண்குமார் இயக்க இருப்பதாகவும், இந்த படத்தை சித்தார்த் தயாரிக்க இருப்பதாகவும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் உருவான ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதன் பிறகு அவர் பல திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது ’இந்தியன் 2’ உள்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ’அவள்’ ’காதலில் சொதபோது எப்படி’ ’ஜில் ஜங் ஜக்’ ஆகிய மூன்று படங்களை தயாரித்து உள்ள நடிகர் சித்தார்த் நான்காவதாக ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை விஜய் சேதுபதி நடித்த ’பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்க இருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டைட்டில் ’சித்தா’ என்று வைக்கப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்க உள்ளார் என்பதும் இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயனின் ’கனா’ உள்பட ஒரு சில படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தனுஷின் 50வது படம் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா?

தனுஷின் 50வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் அவரது நடிப்பில் உருவான சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

விஜய் வீட்டு சிசிடிவி கேமரா முன் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த பள்ளி மாணவி: நிறைவேற்றுவாரா விஜய்?

நடிகர் விஜய் வீட்டு முன் இருந்த சிசிடிவி கேமரா முன் பள்ளி மாணவி ஒருவர் நின்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மகளுக்கு வாழ்த்து கூறிய ஷாருக்கான்.. ஏன் தெரியுமா?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது மகளுக்கு வாழ்த்து கூறிய பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.

மாதவனுக்கும், அவரது மனைவிக்கும் பாராட்டு தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்.. ஏன் தெரியுமா?

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் மாதவன் மற்றும் அவரது மனைவியின் தியாகத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் ப்ளூ டிக் இழந்த த்ரிஷா, ஜெயம் ரவி.. 'பொன்னியின் செல்வன்' புரமோஷன் காரணமா?

 'பொன்னியின் செல்வன்' படத்தின் புரமோஷன் காரணமாக நடிகர் ஜெயம் ரவி, நடிகை த்ரிஷா உள்ளிட்டோர் ட்விட்டரில் ப்ளூ டிக் இழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.