லண்டனில் அறுவை சிகிச்சை… விபத்து குறித்த நடிகர் சித்தார்த் கூறிய விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் சித்தார்த். இவர் இயக்குநர் அஜய்பூபதி இயக்கத்தில் “மகாசமுத்திரம்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது ரசிகர்களுக்கு தெரிந்ததுதான். ஷர்வானந்த், அதிதி ராவ் ஹைதேரி, அனு இமானுவேல் போன்றோர் நடித்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
ஆனால் இந்த விழாவிற்கு நடிகர் சித்தார்த் வரவில்லை. இதுகுறித்து இயக்குநர் அஜய் பூபதி கூறும்போது நடிகர் சித்தார்த் லண்டனில் சிகிச்சை பெற்றுவருகிறார் எனத் தெரிவித்து இருந்தார். இதனால் சித்தார்த்துக்கு என்னவாயிற்று? எதற்காக சிகிச்சை என்பது போன்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் தற்போது இந்தியாவிற்கு திரும்பியுள்ள நடிகர் சித்தார்த், மகாசமுத்திரம் படத்தின் ஸ்டண்ட் காட்சிக்கான படப்பிடிப்பின்போது தனக்கு காயம் ஏற்பட்டதாகவும் அதற்கு லண்டனில் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் தனது இன்ஸ்டாவில் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் டப்பிங்கிற்காக ஹைத்ராபாத் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகர் சித்தார்த் வெளியிட்டுள்ள தனது இன்ஸ்டா பதிவில், “உங்களின் அன்புக்கு நன்றி. ஸ்டண்ட் காட்சியில் நடித்தபோது முதுகெலும்பில் காயம் ஏற்பட்டது. அதற்கு தான் சிகிச்சை. சில மாதங்களுக்கு ஓய்வில் இருக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளனர். டாக்டர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்டுகளுக்கு நன்றி. நல்ல காலம் எனக்கு வலுவான முதுகெலும்பு இருக்கிறது.
நாங்கள் நடினமாக உழைத்த படத்தை தியேட்டர்களில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து ரசிக்கப் போகிறேன். விரைவில் உங்களை சந்திக்கிறேன். உங்களின் அன்பை பார்த்து நெகிழ்ந்துவிட்டேன்“ எனப் பதிவிட்டு உள்ளார். இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள் நடிகர் சித்தார்த் விரைவில் குணமடைய வேண்டும் என அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com