சித்தார்த்தின் 'சித்தா': புதிய ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,November 21 2023]

விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட “சித்தா” திரைப்படம், நவம்பர் 28 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படம் நவம்பர் 17ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் சித்தார்த், நிமிஷா சஜயன் மற்றும் சஹஸ்ரா ஸ்ரீ ஆகியோர் நடிப்பில், இயக்குநர் SU அருண் குமார் இயக்கத்தில் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட 'சித்தா' திரைப்படத்தை, நவம்பர் 28 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.

திரை விமர்சகர்களால் இந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என்று பாராட்டப்பட்ட “சித்தா” படம், குழந்தை கடத்தல் மற்றும் குழந்தை பாலியல் துன்புறுத்தல் போன்ற முக்கியமான சமூகப் பிரச்சினைகளை அழுத்தமாகப் பேசும், அற்புதமான டிராமா திரைப்படமாகும். தமிழ்த் திரையுலகில் இதுவரை திரையில் பேசப்படாத சில முக்கியமான விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய விதத்திற்காக, இப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பழனி நகரத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ள இக்கதை, பள்ளிக்குச் செல்லும் ஒரு சிறுமி கடத்தப்படுவதை சுற்றிச் சுழல்கிறது. அந்தக் கடத்தலால் அந்த சிறுமியின் குடும்பமும், அக்குழந்தையும் படும் துயரத்தையும், அந்தக் குழந்தையை மீட்க குடும்பத்தினர் எடுக்கும் முயற்சிகளையும் இக்கதை பரபரப்பாகச் சொல்கிறது.

இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் மற்றும் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவு பாலாஜி சுப்ரமணியம். நடிகர் சித்தார்த் அவர்கள், தானே தயாரித்து நடித்திருக்கும் இந்த அற்புதமான திரைப்படம், குடும்ப ரசிகர்களை கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மாயா, பூர்ணிமா கேங்கில் இருந்து விலகிவிட்டாரா? மறைமுகமாக தெரிவித்த ஜோவிகா..!

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஜோவிகா ஆரம்பத்தில் தனித்து விளையாடிய நிலையில் கடந்த சில நாட்களாக அவர் மாயா  பூர்ணிமா கேங்கில் இருந்து வருகிறார் என்பது பார்வையாளர்களுக்கு தெரிந்திருக்கும்.

'கலைஞர் 100' விழாவில் அஜித் கலந்து கொள்வாரா? ஆர்கே செல்வமணி பதில்..!

திரை உலகினர் சார்பில் கலைஞர் 100' என்ற விழா டிசம்பர் 24ஆம் தேதி நடத்தப்பட இருக்கும் நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன்

த்ரிஷா பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க மன்சூர் அலிகான் இதை செய்ய வேண்டும்: பாரதிராஜா

நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் இந்த பிரச்சனைக்கு மன்னிப்பு கேட்டு மன்சூர் அலிகான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நடப்பு தயாரிப்பாளர்

'ஜெயிலர்' படத்தின் மாஸ் கேரக்டருக்கு இணையானது: 'தளபதி 68' குறித்து ஜெயராம்..!

'ஜெயிலர்' படத்தில் நடித்த மாஸ் கேரக்டருக்கு இணையானது 'தளபதி 68' படத்தில் என்னுடைய கேரக்டர் என நடிகர் ஜெயராம் தெரிவித்துள்ளார்.  

'துருவ நட்சத்திரம்' படத்தின் முதல் விமர்சனம்.. கெளதம் மேனனை வாழ்த்திய பிரபலம்..!

கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தை பார்த்த பிரபலம்