திருமணத்திற்கு முன் 3 உறுதிமொழிகள் கொடுத்த சித்தார்த்.. நெகிழ்ந்து போன அதிதிராவ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நடிகர் சித்தார்த்த மற்றும் நடிகை அதிதிராவ் ஹைத்ரி திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் திருமணத்திற்கு முன் அதிதி ராவிடம் சித்தார்த் மூன்று உறுதிமொழிகளை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஆகிய இருவரும் காதலித்து வந்ததாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோவிலில் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் இதில் மிகவும் நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது.
மேலும் நிச்சயதார்த்தத்தின் போது மாற்றிக் கொண்ட மோதிரம் குறித்த புகைப்படத்தை இருவருமே தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் திருமணத்திற்கு முன் நடிகர் சித்தார்த், அதிதிராவ் ஹைத்ரிக்கு மூன்று உறுதிமொழி கொடுத்ததாகவும், அதை கேட்டு அதிதிராவ் நெகிழ்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. அதாவது திருமணத்திற்கு பின்னரும் அதிதி ராவ் தொடர்ந்து படங்களில் நடிக்க தடை இல்லை, அவர் எந்த விதமான கேரக்டர்களையும் தேர்வு செய்து கொள்ளலாம், மேலும் படப்பிடிப்புக்கு எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம் என்று சித்தார்த் உறுதிமொழி கொடுத்துள்ளதாகவும் இதை கேட்டு அதிதிராவ் மகிழ்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
அது மட்டும் இன்றி இருவரும் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க திட்டமும் இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout