close
Choose your channels

எனக்கு வலுவான முதுகெலும்பு உள்ளது: அறுவை சிகிச்சைக்குப்பின் சித்தார்த் பதிவு!

Friday, October 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சித்தார்த்திற்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக வெளிவந்த தகவல் வெளி வந்த நிலையில் தற்போது அந்த அறுவை சிகிச்சை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சித்தார்த் விளக்கம் அளித்துள்ளார்

நடிகர் சித்தார்த் நடித்த ’மகா சமுத்திரம்’ என்ற திரைப்படத்தின் புரமோஷன் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சித்தார்த் கலந்து கொள்ளவில்லை என்பதை அடுத்து இந்த படத்தின் இயக்குநர் அஜய்பூபதி இது குறித்து விளக்கம் அளித்தார். நடிகர் சித்தார்த் அவர்களுக்கு லண்டனில் அறுவை சிகிச்சை நடைபெற்று வருவதால் அவர் வரவில்லை என்று தெரிவித்திருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் சித்தார்த்துக்கு என்ன ஆச்சு என்று கேள்விகளை எழுப்பி வந்தனர்

இந்த நிலையில் சித்தார்த்துக்கு லண்டனில் அறுவை சிகிச்சை முடிந்து உள்ள நிலையில் தற்போது சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து பதிவு செய்துள்ளார். உங்கள் அனைவரின் அன்புக்கும் மிகவும் நன்றி! நான் சண்டை காட்சி ஒன்றில் நடித்தபோது முதுகில் காயம் ஏற்பட்டது. அதனால் லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டேன். எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றி! எனக்கு கடவுள் புண்ணியத்தில் வலுவான முதுகெலும்பு இருந்ததால் நான் எளிதில் குணம் அடைந்து விட்டேன். மீண்டும் சினிமாவில் பணிபுரிய காத்திருக்கின்றேன். அனைவருக்கும் எனது நன்றி’ என்று தெரிவித்துள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment