ஹாலிவுட் படத்தில் இணைந்த நடிகர் சித்தார்த்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒருபக்கம் அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகியுள்ளார், இன்னொரு பக்கம் தனுஷ் நடித்த ஹாலிவுட் படமான 'பக்கிரி' உலகம் முழுவதும் சக்கை போடு போட்டு வருகிறது. இவ்வாறு தமிழ் நட்சத்திரங்கள் ஹாலிவுட்டையும் கலக்கி வரும் நிலையில் நடிகர் சித்தார்த் தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில் பணிபுரிந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஹாலிவுட்டில் தயாரான 'தி லயன் கிங்' (The Lion King') என்ற அனிமேஷன் திரைப்படம் வரும் ஜூலை 19ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படம் இந்தியாவில் தமிழ் உள்பட முக்கிய இந்திய மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்திய மொழிகளில் இந்த படத்தின் டப்பிங் செய்யும் பணிகள் நடந்து வரும் நிலையில் தமிழில் இந்த படத்திற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார். இந்த படத்தில் சிம்பா என்ற சிங்கத்தின் கேரக்டருக்கு ஆங்கிலத்தில் டொனால்ட் குளோவர் என்பவர் குரல் கொடுத்திருக்கும் நிலையில் அதே கேரக்டருக்கு தமிழில் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார். இந்த தகவலை சித்தார்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
It's a huge honour to voice #Simba in #Tamil in #TheLionKing. It is that extra bit special because I'm the biggest fan of the genius @donaldglover. I hope I have managed at least a fraction of the magic that he has in the film. Thank you #Disney and @Jon_Favreau for this. ❤️ pic.twitter.com/rVjuankcC0
— Siddharth (@Actor_Siddharth) June 25, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com