close
Choose your channels

மணிரத்னம் நாயகியை காதலிக்கின்றாரா நடிகர் சித்தார்த்? வைரலாகும் வீடியோ

Wednesday, July 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் உருவான படத்தில் நடித்த நடிகை ஒருவரை நடிகர் சித்தார்த் காதலித்து வருவதாகவும் இருவரும் டேட்டிங் செய்து கொண்டிருப்பதாகவும் சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரை உலகின் நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைத்ரியும் காதலிப்பதாக கூறப்படுகிறது. மணிரத்னம் இயக்கிய ’காற்று வெளியிடை’ மற்றும் ’செக்கச்சிவந்த வானம் ’ஆகிய படங்களில் நடித்த அதிதிராவ் ஹைத்ரி, ஏராளமான இந்தி படங்களிலும் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் மும்பையில் சித்தார்த் மற்றும் அதிதிராவ் ஆகிய இருவரும் இணைந்து ஒருசில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இருப்பினும் சித்தார்த் மற்றும் அதிதிராவ் ஹைத்ரி ஆகிய இருவரும் தாங்கள் டேட்டிங் செய்வதாகவோ காதலிப்பதாகவோ இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் சித்தார்த்தின் பிறந்தநாளின் போது அதிதிராவ் ஹைத்ரி தனது சமூக வலைதள பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment