பெண்கள் ஆடை குறித்த போதனைகளை நிறுத்துங்கள். சித்தார்த் ஆவேசம்

  • IndiaGlitz, [Saturday,January 07 2017]

கடந்த புத்தாண்டு தினத்தன்று நடந்த கொண்டாட்டத்தின்போது பெங்களூரில் பெண்கள் பாலியல் வன்முறை தாக்குதலுக்கு உட்பட்டது நாடு முழுவதையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி கேமிரா வீடியோ சமூக வலைத்தளங்களில் வெகுவேகமாக பரவியதால் பெண்கள் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கொதித்து எழுந்தனர்.

இந்த சம்பவத்திற்கு அரசியல்வாதிகள் திரையுலக நட்சத்திரங்கள் என அனைத்து தரப்பினர்களும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் கர்நாடக உள்துறை மந்திரி மட்டும் 'இந்த சம்பவத்திற்கு பெண்களின் உடையும் ஒரு காரணம்' என்று சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகர் சித்தார்த் இதுகுறித்து தனது கருத்தை மிகவும் கோபத்துடனும் வருத்தத்துடனும் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: 'இந்தியப் பெண்களை நம்மிடம் இருந்து யார் காப்பாற்றுவார்கள்? இந்த உலகத்தில் மிகவும் அருவருக்கத்த, மோசமான ஆண்களாக நாம் இருக்கிறோம். இந்த சம்பவத்திற்காக வெட்கி தலைகுனிவதுடன் அனைவரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு பெண் தான் நினைக்கும் ஆடையை அணிய வேண்டும் என்று நினைப்பது எப்படி தவறாகும்?. அதை தவறாக நினைப்பதை உடனே நிறுத்த வேண்டும். பெண்களின் ஆடைகள் குறித்த போதனைகளை முதலில் நிறுத்த வேண்டும்

பாலியல் வன்முறை, கற்பழிப்பு போன்ற சம்பவங்களை எதை வைத்தும் நியாயப்படுத்த வேண்டாம். இதில் எதுவுமே விதிவிலக்கல்ல. இந்த விஷயத்திற்காக அனைவரும் மனம் திறந்து குரல் கொடுங்கள். நீங்கள் ஒன்றை பார்த்தால் அதை உடனே சொந்தமாக்கி கொள்ள உரிமை கொண்டாட கூடாது. உங்கள் கண்முன் நிற்பது மாற வேண்டும் என்று நினைப்பதைவிட உங்கள் பார்வையை மாற்றுங்கள்' என்று நடிகர் சித்தார்த் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

சித்தார்த்தின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு குவிந்து வருகிறது.

More News

பெங்களூர் புத்தாண்டு சம்பவம். முக்கிய குற்றவாளிகள் பிடிபட்டனர்.

கடந்த புத்தாண்டு தினத்தன்று அதிகாலையில் பெங்களூரில் இளம்பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தில் வெளிவந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது...

பழம்பெரும் நடிகைக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய உலக நாயகன்

உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் சரோஜாதேவிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்...

பொங்கல் ரேசில் இருந்து விலகிய படத்திற்கு 'யூ' சான்றிதழ்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'பைரவா' படம் வரும் பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

'பைரவா' படத்துடன் கனெக்சன் ஆகும் வெற்றிமாறன் - ஜிவி பிரகாஷ்

கடந்த ஆண்டு வெளியான 'விசாரணை' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகை உலக அளவில் கொண்டு சென்றவர் இயக்குனர் வெற்றிமாறன். இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருதுக்கு சென்ற படம் என்ற பெருமையையும் இந்த படம் பெற்றது.

இயக்குனர் கே.பாக்யராஜூக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இந்தியாவின் மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவர், இயக்குனர், நடிகர் கே.பாக்யராஜ் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை சிறப்புடன் கொண்டாடி வருகிறார்.