தடுப்பூசி எங்கடா டேய்? நடிகர் சித்தார்த்தின் ஆவேச டுவிட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சித்தார்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரபிரதேச மாநில முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு ட்வீட்டை பதிவு செய்திருந்த நிலையில் சித்தார்த்துக்கு பாஜகவினர் மிரட்டல் விடுத்ததாக செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது நடிகர் சித்தார்த் மீண்டும் தனது டுவிட்டர் பக்கத்தில் ’தடுப்பூசி எங்கடா டேய்? என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. இதனை அடுத்து 18 வயதுக்கு மேலானவர்கள் தடுப்பூசி போடுவதற்காக கோடிக்கணக்கில் முன்பதிவு செய்தனர். ஆனால் இன்று 18 வயதுக்கு மேலானவர்கள் தடுப்பூசி போடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்டர் செய்த தடுப்பூசிகள் இன்னும் தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து கிடைக்கவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து மத்திய அரசையும் மாநில அரசையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இந்த நிலையில்தான் நடிகர் சித்தார்த் ’தடுப்பூசி எங்கடா டேய்’ என தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த டுவீட்டுக்கு ஏராளமானவர்கள் கமென்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பதும் இது குறித்த ஹேஷ்டேக் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Vaccine enga da dei?
— Siddharth (@Actor_Siddharth) May 1, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments