தடுப்பூசி எங்கடா டேய்? நடிகர் சித்தார்த்தின் ஆவேச டுவிட்!

  • IndiaGlitz, [Saturday,May 01 2021]

நடிகர் சித்தார்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரபிரதேச மாநில முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு ட்வீட்டை பதிவு செய்திருந்த நிலையில் சித்தார்த்துக்கு பாஜகவினர் மிரட்டல் விடுத்ததாக செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது நடிகர் சித்தார்த் மீண்டும் தனது டுவிட்டர் பக்கத்தில் ’தடுப்பூசி எங்கடா டேய்? என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. இதனை அடுத்து 18 வயதுக்கு மேலானவர்கள் தடுப்பூசி போடுவதற்காக கோடிக்கணக்கில் முன்பதிவு செய்தனர். ஆனால் இன்று 18 வயதுக்கு மேலானவர்கள் தடுப்பூசி போடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்டர் செய்த தடுப்பூசிகள் இன்னும் தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து கிடைக்கவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து மத்திய அரசையும் மாநில அரசையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இந்த நிலையில்தான் நடிகர் சித்தார்த் ’தடுப்பூசி எங்கடா டேய்’ என தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த டுவீட்டுக்கு ஏராளமானவர்கள் கமென்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பதும் இது குறித்த ஹேஷ்டேக் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பிரபல யூடியூபர்கள் ராம்-ஜானு திருமண நிச்சயதார்த்தம்: வைரல் வீடியோ

யூடியுப் மூலம் பிரபலமான ராம் மற்றும் ஜானு ஆகியோர் நீண்ட காலம் காதலித்து தற்போது தங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ராம்-ஜானுவின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி சமீபத்தில்

தமிழ் சினிமாவின் ஃபீனிக்ஸ் பறவை: தன்னம்பிக்கையால் உயர்ந்த தல அஜித்துக்கு வாழ்த்துக்கள்!

இன்று 50வது பிறந்த நாளை கொண்டாடும் தமிழ் சினிமாவின் ஃபீனிக்ஸ் பறவையான அஜித் இன்னும் பல ஆண்டுகள் தனது ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்று அவருக்கு வாழ்த்து தெரிவிப்போம்

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி இல்லை… ஏன்?

இந்தியா முழுக்க கடந்த மார்ச் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா நோயாளிகளுக்காக ஆட்டோவை ஆம்புலஸ்ஸாக மாற்றிய நல்ல உள்ளம்!

கொரோனாவின் தீவிரத்தால் தற்போது படுக்கை தட்டுப்பாடு  மட்டுமல்ல, பல மாநிலங்களில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறையும் நிலவி வருகிறது.

தமிழகத்தில் படுக்கை வசதி, ஆக்சிஜன் தேவைக்கு புதிய டிவிட்டர் கணக்கு!

தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாதபோதோ அல்லது ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவும்போதோ அதுகுறித்த தகவல்களை