உங்க மூஞ்சியெல்லாம் எங்க படத்தை காசு கொடுத்து பார்க்க வேண்டாம்: கோபத்தில் கொந்தளித்த சித்தார்த்

  • IndiaGlitz, [Monday,January 08 2018]

சித்தார்த், ஆண்ட்ரியா நடித்த 'அவள்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் 'அவள்' படத்தை பார்க்க தவறியவர்கள் தற்போது நெட்பிளிக்ஸில் பார்த்து கொள்ளலாம் என்று நடிகர் சித்தார்த் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்

இதற்கு ஒரு குசும்புக்கார ரசிகர், 'எங்களை எப்பவும் தமிழ் ராக்கர்ஸ் கைவிட்டதில்லை' என்று கூறியிருந்தார். ஏற்கனவே ஆன்லைன் பைரசி மீது கடுப்பாக இருக்கும் சித்தார்த், இந்த கமெண்ட்டை பார்த்ததும் கோபத்தில் கொந்தளித்து 'உங்க மூஞ்சியெல்லாம் எங்க படம் காசு கொடுத்து பார்த்தா எங்களுக்கு தான் அசிங்கம்.. ' என்று ஆவேசமாக பதிவு செய்துள்ளார்.

சித்தார்த்தின் இந்த கருத்துக்கு பதிலளித்த அவரது ரசிகர் ஒருவர், 'என்ன தான் இருந்தாலும் நீங்கள் கூறியது தவறு' என்று பதிலளித்துள்ளார். அந்த ரசிகர்களுக்கு பதில் கூறிய சித்தார்த், 'இதையே நீங்கள் என்ன தான் இருந்தாலும் பைரசி தவறு என்று கூறியிருந்தால் நல்லா இருந்திருக்கும் என்று கூறினார்.