சித்தார்த் - SU அருண்குமார் இணைந்த படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் சேதுபதி நடித்த ’பண்ணையாரும் பத்மினியும்’ ’சேதுபதி’ மற்றும் ’சிந்துபாத்’ ஆகிய மூன்று படங்களை இயக்கிய இயக்குனர் SU அருண்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் நடித்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
நடிகர் சித்தார்த் நடிப்பில், அருண்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’சித்தா’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீஸ்க்கு தயாரானது. இந்த நிலையில் இந்த படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் செய்து உடன் கூடிய போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அருண்குமாரின் முந்தைய மூன்று திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திபு நிணன் தாமஸ் பாடல்கள் கம்போஸ் செய்த நிலையில், விஷால் சந்திரசேகர் பின்னணி இசை அமைத்துள்ளார். பாலாஜி சுப்பிரமணியன் ஒளிப்பதிவில், சுரேஷ் பிரசாத் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை நடிகர் சித்தார்த் தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
A story never told before...
— Jayam Ravi (@actor_jayamravi) August 20, 2023
Here is the ASTOUNDING poster of
Siddharth in & as CHITHHA
An SU Arun Kumar picture.
In Cinemas worldwide Sep 28.
A RED GIANT MOVIES release. #etakiEntertainment#SiddharthAsChithha#CHITHHAfromSEP28 Good luck machi! @Etaki_official #Siddharth… pic.twitter.com/2kHS1IWLnE
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com