சித்தார்த் - அதிதிராவ் 2வது முறையாக திருமணம்.. வைரலாகும் புகைப்படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதிராவ் ஹைத்ரி கடந்த செப்டம்பர் மாதமே திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியான நிலையில் இன்று மீண்டும் திருமணம் செய்து கொண்டனர்.
நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதிராவ் ஹைத்ரி ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவருக்கும் கடந்த மார்ச் மாதத்தில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோவில் ஒன்றில் நிச்சயதார்த்தம் நடந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் வைரலானதை பார்த்தோம்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் சித்தார்த் - அதிதிராவ் ஹைத்ரி திருமணம் நடைபெற்றதாக கூறப்பட்ட நிலையில், இன்று ராஜஸ்தானில் இரண்டாவது முறையாக திருமணம் நடைபெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பிஷன்கார்க் என்ற பகுதியில் உள்ள அலியா கோட்டையில் இந்து முறைப்படி இன்று திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணம் குறித்து இருவருமே தங்களது சமூக வலைத்தளங்களில் `` The best thing to hold on to in life is each other!'' என பதிவு செய்துள்ளனர். அதாவது வாழ்க்கையில் மிக முக்கியமானது ஒருவரை ஒருவர் தாங்கி பிடிப்பதே" என்று குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ’மகா சமுத்திரம்’ திரைப்படத்தில் சித்தார்த் மற்றும் அதிதிராவ் ஆகிய இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அப்போது படப்பிடிப்பின் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் அவர்கள் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் இந்த காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments