சூப்பர்ஹிட் பாடலுக்கு செம ஆட்டம் ஆடும் சித்தார்த் - அதிதிராவ் ஹைத்ரி .. திருமணம் எப்போது?

  • IndiaGlitz, [Tuesday,February 28 2023]

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைத்ரி ஆகிய இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் சூப்பர் ஹிட் பாடலுக்கு செம நடனம் ஆடியுள்ள நிலையில் திருமணம் எப்போது? என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதிகளில் கேள்வி எழுப்பு வருகின்றனர்.

இயக்குனர் ஷங்கர் இயக்கிய ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் சித்தார்த். அதன் பிறகு அவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘காற்று வெளியிடை’, ‘செக்க சிவந்த வானம்’ ஆகிய படங்களில் நடித்த அதிதிராவ் ஹைத்ரி கடந்த சில வருடங்களாக சித்தாத்துடன் நெருக்கமாக பழகி வருகிறார் என்றும் இருவரும் விரைவில் திருமணம் செய்ய போகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஷால் நடித்த ’எனிமி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’மால டம் டம்… மஞ்சர டம் டம்’ என்ற பாடலுக்கு இருவரும் இணைந்து செம நடனம் ஆடியுள்ளனர். இந்த வீடியோவை அதிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவின் கமெண்ட்ஸ் பகுதியில் இருவருக்கும் திருமணம் எப்போது? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

More News

மீண்டும் எலான் மஸ்க் முதலிடம்.. எப்படி சாத்தியம் ஆகியது?

கடந்த சில ஆண்டுகளாக உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்த டெஸ்லா நிறுவனத்தின் அதிபர் எலான் மஸ்க் சமீப காலமாக தனது முதல் இடத்தை இழந்தார் என்பதை பார்த்தோம்.

'அஜித் 62' படத்தின் நாயகி இவரா? 6 வருடங்களுக்கு பின் மீண்டும் இணைகிறாரா?

அஜித் நடிக்க இருக்கும் 62வது படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது அஜித் ஜோடியாக நடிக்கும் நாயகி தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மணிமேகலை.. வெங்கட்பட் என்ன சொன்னார் தெரியுமா?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக சமீபத்தில் மணிமேகலை தனது சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டவுடன் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

'சூர்யா 42' படத்தின் டைட்டில் இதுதான்.. இணையத்தில் வைரலாகும் மாஸ் தகவல்..!

சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 42' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தில் சூர்யா 10க்கும் மேற்பட்ட கெட்டப்களில் நடித்து

'பொறக்கும் போதும் துரோகம் பண்ணு, இறக்கும் போதும் துரோகம் பண்ணு.. 'அகிலன்' சிங்கிள் பாடல்..!

 ஜெயம் ரவி நடித்த 'அகிலன்' என்ற திரைப்படம் வரும் மார்ச் 10ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.