'இந்தியன் 2' படத்தில் சித்தார்த் கேரக்டர் என்ன?

  • IndiaGlitz, [Friday,January 25 2019]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டு முதல்கட்ட படப்பிடிப்பை விறுவிறுப்புடன் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகர் சித்தார்த் நடிக்கவுள்ளார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் சித்தார்த், கமல்ஹாசனின் மகனாக நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. 'இந்தியன்' முதல் பாகத்தில் சேனாதிபதி, சந்துரு என இரண்டு கேரக்டர்களில் கமல்ஹாசன் நடித்த நிலையில் சந்துரு கேரக்டரின் மகனாக சித்தார்த் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

காஜல் அகர்வால் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த படம் அனிருத் இசையில் லைகாவின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு உலகின் எட்டு நாடுகளில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

விஸ்வாசம் படம் குறித்து இயக்குனர் கரு.பழனியப்பனின் கருத்து !

பார்த்திபன் கனவு , சிவப்பதிகாரம் , சதுரங்கம் உள்பட பல படங்களை இயக்கிய இயக்குனர் கரு.பழனியப்பன் தற்போது 'புகழேந்தி என்னும் நான்' என்னும் படத்தை இயக்கி வருகிறார்.

2வது கட்டத்திற்கு சென்ற யோகிபாபுவின் 2 படங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய யோகிபாபு ஒரே நேரத்தில் அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

'ராஜாவுக்கு செக்' வைத்த இயக்குனர் சேரன்

நீண்ட இடைவெளிக்கு பின் சேரன் இயக்கி வரும் 'திருமணம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது

விஷால்-தமன்னா படப்பிடிப்பு தொடங்குவது எப்போது?

விஷால், தமன்னா நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு 'கத்திச்சண்டை' என்ற திரைப்படம் வெளிவந்த நிலையில் மிண்டும் ஒரு படத்தில் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது

தனுஷின் 'அசுரன்' படம் குறித்த முக்கிய தகவல்

தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு 'வடசென்னை' மற்றும் 'மாரி 2' என இரண்டு படங்கள் வெளியான நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளிவந்தது.