திடீரென எல்லோரும் ஒரே ஸ்ருதியில் பாடுகிறார்கள்: சித்தார்த்
Send us your feedback to audioarticles@vaarta.com
உங்கள் ஹீரோவை கவனமாக அறிவுபூர்வமாக தேர்வு செய்யுங்கள் என்றும் திடீரென எல்லோரும் ஒரே ஸ்ருதியில் பாடுகிறார்கள் என்றும் சித்தார்த் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் நிலையில் எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த திரையுலக, கிரிக்கெட் பிரபலங்கள் திடீரென நேற்று முதல் இந்தியாவின் இறையாண்மை குறித்தும், தேசத்தின் ஒற்றுமை குறித்தும், விவசாயிகள் போராட்டம் குறித்தும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒருவித அழுத்தம் காரணமாகத்தான் இந்த பிரபலங்களின் கருத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவ்வப்போது சமூக கருத்துகளை ஆவேசமாக தெரிவித்து வரும் நடிகர் சித்தார்த் இது குறித்து கூறிய போது ’உங்கள் ஹீரோக்களை நீங்கள் கவனமாகவும் அறிவுபூர்வமாகவும் தேர்வு செய்யுங்கள். கல்வி, அன்பு, நேர்மை மற்றும் கொஞ்சம் முதுகெலும்புடன் நடந்து கொள்ளும் தன்மை கண்டிப்பாக தேவை. எந்த நிலைப்பாட்டிலும் எதிலும் எடுக்காதவர்கள் திடீரென ஒரே ஸ்ருதியில் பாடுகிறார்கள் என்பதை யோசியுங்கள் இதுதான் இவர்களின் பிரச்சாரம்’ என்று விமர்சனம் செய்துள்ளார்
விவசாயிகள் போராட்டம் குறித்தும் திடீரென அரசுக்கு வக்காலத்து வாங்கி பேசும் திரையுலக, கிரிக்கெட் பிரபலங்கள் குறித்தும் சித்தார்த் கூறியுள்ள இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
When powerful people who never take a stand, all suddenly sing the same tune in an orchestrated effort and just tow the line they are told to like pawns, that's what propaganda is all about. Know your #propaganda. #farmersrprotest
— Siddharth (@Actor_Siddharth) February 4, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com