பாவம் அஜித்-விஜய்: கூறியது யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 62 படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்த அனுமதித்தது குறித்து நடிகர் சித்தார்த் கூறிய கருத்தை சற்றுமுன் பார்த்தோம். சித்தார்த் கூறிய கருத்தில் விஜய்க்கு எதிராக எதுவுமே இல்லை. தயாரிப்பாளர் சங்கம் அனைத்து தயாரிப்பாளர்களிடம் ஒரே மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளைத்தான் அவர் விடுத்திருந்தார்
ஆனால் சித்தார்த்தின் இந்த டுவீட்டுக்கு பதிவாகியுள்ள கமெண்டுக்கள் வாசிக்கவே முடியாத அளவில் அருவருப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருசில அஜித் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் மாறி மாறி பதிவு செய்து வரும் கருத்துக்களும், புகைப்படங்களும் ரசிக்கும்படி இல்லை
இந்த நிலையில் இதுகுறித்து சித்தார்த் கூறியபோது, 'என்னுடைய பதிவிற்கு கிடைத்துள்ள முதல் 100 கமெண்டுக்களை பார்க்கும்போது தமிழ் சினிமாவிற்கு ஒரு பைசாவிற்கு கூட பிரயோசனமில்லாத கருத்துக்கள் பதிவாகியிருப்பதை புரிந்து கொள்ளலாம். அசுத்தமான மொழி, தேவையற்ற விஷம், சம்பந்தமில்லாத கோவம். சில வேலையில்லாத முட்டாள்களின் செயல்களால் அனைவரின் பெயரும் கெடுகிறது. பாவம் விஜய்-அஜித்' என்று பதிவு செய்துள்ளார்.
If you want to know what will not add 1 paisa value to Tamil Cinema, please read last 100 replies on my timeline. Filthy language, thevayillatha poison, sambandhamillatha kovam. Two sets of few jobless idiots spoiling everyone's name and time. Paavam Vijay-Ajith.
— Siddharth (@Actor_Siddharth) March 21, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments