பாவம் அஜித்-விஜய்: கூறியது யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,March 21 2018]

நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 62 படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்த அனுமதித்தது குறித்து நடிகர் சித்தார்த் கூறிய கருத்தை சற்றுமுன் பார்த்தோம். சித்தார்த் கூறிய கருத்தில் விஜய்க்கு எதிராக எதுவுமே இல்லை. தயாரிப்பாளர் சங்கம் அனைத்து தயாரிப்பாளர்களிடம் ஒரே மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளைத்தான் அவர் விடுத்திருந்தார்

ஆனால் சித்தார்த்தின் இந்த டுவீட்டுக்கு பதிவாகியுள்ள கமெண்டுக்கள் வாசிக்கவே முடியாத அளவில் அருவருப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருசில அஜித் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் மாறி மாறி பதிவு செய்து வரும் கருத்துக்களும், புகைப்படங்களும் ரசிக்கும்படி இல்லை

இந்த நிலையில் இதுகுறித்து சித்தார்த் கூறியபோது, 'என்னுடைய பதிவிற்கு கிடைத்துள்ள முதல் 100 கமெண்டுக்களை பார்க்கும்போது தமிழ் சினிமாவிற்கு ஒரு பைசாவிற்கு கூட பிரயோசனமில்லாத கருத்துக்கள் பதிவாகியிருப்பதை புரிந்து கொள்ளலாம்.  அசுத்தமான மொழி, தேவையற்ற விஷம், சம்பந்தமில்லாத கோவம். சில வேலையில்லாத முட்டாள்களின் செயல்களால் அனைவரின் பெயரும் கெடுகிறது. பாவம் விஜய்-அஜித்' என்று பதிவு செய்துள்ளார்.

More News

'இருட்டு அறைக்கு' கிடைத்த எதிர்பார்த்த சென்சார் சான்றிதழ்

'ஹர ஹர மகாதேவி' படத்தை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமாரின் அடுத்த படமான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிந்தது

மால்களில் பார்க்கிங் கட்டணம் ரத்து! இங்கல்ல...தெலுங்கானாவில்

தமிழகத்தின் பெருநகரங்களில் நடைபெறும் பார்க்கிங் கட்டணம் என்ற கொள்ளையை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில்

விஜய் படத்திற்கு சிறப்பு அனுமதி: கருத்து கூறிய சித்தார்த்

தமிழ் சினிமாவுலகம் இதுவரை கண்டிராத வகையில் புதிய படங்கள் வெளியீடு இல்லை, படப்பிடிப்பு இல்லை, போஸ்ட் புரடொக்சன்ஸ் இல்லை என ஒட்டுமொத்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது.

சூர்யா படத்தில் ப்ரியாவாரியர் நடிப்பது உண்மையா? கே.வி.ஆனந்த் விளக்கம்

சூர்யா நடித்து வரும் 'NGK' படத்தை அடுத்து இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அவர் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்தவர்கள் யார் யார்? சசிகலா வாக்குமுலம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு மருத்துவமனையில் உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்தபோது அவரை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை