எனது நகைச்சுவை யாருக்கும் புரியவில்லை: மன்னிப்பு கேட்ட சித்தார்த்
Send us your feedback to audioarticles@vaarta.com
தான் கூறிய நகைச்சுவை யாருக்கும் புரியவில்லை என்றும் அதனால் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் நடிகர் சித்தார்த் சாய்னா நேவாலுக்கு எழுதியுள்ள மன்னிப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பஞ்சாப் மாநிலத்தில் பாரதப் பிரதமர் மோடி சென்ற போது பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவல் டுவிட் ஒன்றை பதிவு செய்து இருந்தார். அந்த டுட்வீட்டுக்கு சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் சித்தார்த் தனது டுவிட்டரில் பதிவு செய்ததை அடுத்து அவர் மீது கண்டனங்கள் குவிந்தது என்பதும், தேசிய மகளிர் ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபியிடம் புகார் அளித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சித்தார்த்திற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். இந்த நிலையில் நடிகர் சித்தார்த்து வருத்தம் தெரிவித்து தற்போது சாய்னா நேவாலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
உங்கள் டுவீட்டுக்கு நான் பதிவு செய்த ட்வீட்டில் சரியாக புரிந்து கொள்ளப்படாத எனது நகைச்சுவைக்கு மன்னிப்பு கோருகிறேன். எனது டுவீட்டில் உள்ள வார்த்தைகள் நகைச்சுவைக்கு ஆனது மட்டுமே, உள்நோக்கம் கொண்டது அல்ல. ஒரு நகைச்சுவை யாருக்கும் புரியவில்லை என்றால் அது சிறந்த நகைச் சுவையாக இருக்காது. தங்களது டுவீட்டுக்கு பதிலாக நான் பதிவிட்ட வார்த்தைகளை நியாயப்படுத்த முடியாது. எனவே என்னுடைய மன்னிப்பை ஏற்றுக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் எப்போதும் என்னுடைய சாம்பியன் என்றும் கூறியுள்ளார்.
சித்தார்த்தின் மன்னிப்பை அடுத்து இந்த பிரச்சனை இத்துடன் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Dear @NSaina pic.twitter.com/plkqxVKVxY
— Siddharth (@Actor_Siddharth) January 11, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout