நிலவேம்பு கசாயம் சர்ச்சை: கமல்ஹாசனுக்கு சித்த மருத்துவர்கள் சங்கம் கண்டனம்

  • IndiaGlitz, [Thursday,October 19 2017]

கடந்த சில மாதங்களாக கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு பொதுமக்களின் அமோக ஆதரவை பெற்ற நிலையில் முதன்முதலாக அவருடைய டுவீட் ஒன்றுக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

கமல்ஹாசனின் டுவிட்டுக்களுக்கு அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவிப்பது சாதாரணமாக இருந்த நிலையில் நேற்று அவர் தெரிவித்த நிலவேம்பு கசாயம் குறித்த கருத்துக்கு அரசு தரப்பில் இருந்து மட்டுமின்றி பொதுமக்கள் தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் தற்போது சித்த மருத்துவர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சித்த மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் ஆ.சுவாமிநாதன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 'தெரியாத விஷயங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ள கமல், நிலவேம்பு குடிநீர் பற்றிய சந்தேகம் தீர, ஏதாவது ஒரு சித்த மருத்துவரை அணுகியிருக்கலாம் என்று கூறியுள்ள அந்த அறிக்கையில், கமல் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றாரே தவிர, நிஜ மருத்துவர் ஒன்றும் இல்லை என்றும், நில வேம்பு பற்றி தெரியாமல் கருத்து தெரிவித்த கமலும் ஒரு போலி டாக்டர் தான் என்றும் அரசு சித்த மருத்துவர்கள் சங்கம் விமர்சித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, கடுமையாக உழைத்து கொண்டு இருக்கும் ஒவ்வொரு சித்த மருத்துவரும் கமலின் கருத்தால், மிகுந்த மன வேதனை அடைந்துள்ளதாகவும் அச்சங்கம் கூறியுள்ளது. எனவே, தேவையின்றி, மருந்துகளை பற்றி பேசி, கமல் போலி மருத்துவ தொழில் செய்ய வேண்டாம் என்றும் அரசு சித்த மருத்துவர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

More News

நிலவேம்பு டுவீட்: கமல் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் 

டெங்கு காய்ச்சலுக்காக விநியோகம் செய்துவரும் நிலவேம்பு குடிநீர் குறித்து கமல் நேற்று தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்த டுவிட்டுக்களுக்கு ஏற்கனவே பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும்

தளபதியின் மெர்சலுக்கு பிரபலங்களின் பாராட்டு

தளபதி விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் பெரும் வரவேற்பையும் வசூல்களையும் பெற்று வருகிறது.

'மெர்சல்' படத்தில் ஜிஎஸ்டி காட்சியை நீக்க வேண்டும்: தமிழிசை 

விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் வழக்கம்போல் இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

நிலவேம்பு கசாயம்: கமல் கருத்துக்கு தமிழிசை, விஜயபாஸ்கர் கண்டனம்

டெங்கு காய்ச்சலுக்கு அளிக்கப்பட்டு வரும் நிலவேம்பு கசாயத்தை தனது ரசிகர்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டாம் என்றும் இந்த கசாயம் குறித்த ஆராய்ச்சிக்கு பின்னர் இந்த பணியை தொடரலாம்,

'எனை நோக்கி பாயும் தோட்டா' இசையமைப்பாளர் அறிவிப்பு

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்து வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை அறிவிக்காமல் படக்குழுவினர் இதுவரை சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்தனர்.