அதர்வா அடுத்த படத்தில் 'சித்தா' நாயகி.. டைட்டில் போஸ்டர் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Wednesday,October 11 2023]

நடிகர் அதர்வா நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதை சற்று முன் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கவின் நடித்த ‘டாடா’ படத்தை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ’டிஎன்ஏ’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதர்வா ஜோடியாக நிமிஷா சஜயன் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற சித்தார்த் நடித்து தயாரித்த ’சித்தா’ படத்தின் நாயகி என்பவர் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜிகர்தண்டா 2’ மற்றும் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவான ’அச்சம் என்பது இல்லையே’ ஆகிய படங்களிலும் நிமிஷா நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படங்கள் விரைவில் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘ஒரு நாள் கூத்து’ ’மான்ஸ்டர்’ ’பர்கானா’ ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க உள்ளது.