மணிரத்னம் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பிரபல பாடகர்

இயக்குனர் மணிரத்னம் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான் இன்று உலகம் போற்றும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தில் பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.

மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' என்ற பிரமாண்டமான திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அவருடைய தயாரிப்பில் 'வானம் கொட்டட்டும்' என்ற திரைப்படம் உருவாகவுள்ளது. மணிரத்னம் கதை-திரைக்கதையில் உருவாகும் இந்த படத்தை அவருடைய உதவியாளர் தனசேகரன் இயக்கவுள்ளார்.

விக்ரம்பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா, உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தில்தான் பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத், டி.இமான் உள்பட பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை பாடியவர் பாடகர் சித்ஸ்ரீராம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பத்திரிகையாளர்களுக்கு இனி அன்பளிப்பு கிடையாது: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக்குழு மற்றும் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

'பிகில்' அப்டேட்: முதல்முறையாக விஜய்க்கு கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'பிகில்' திரைப்படத்தின் சூப்பர் அப்டேட் இன்று மாலை வெளியாகவிருப்பதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி கூறியிருந்ததை இன்று காலை பார்த்தோம்

நடிகர் சங்க தேர்தல்: வாக்கு எண்ணிக்கை குறித்து சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற போதிலும் இதுகுறித்த வழக்கு நிலுவையில் இருப்பதால் தேர்தலில் பதிவான வாக்குகளை மறு உத்தரவு வரும் வரை எண்ணக்கூடாது

பிரமாண்டமான படத்தில் ஜிப்ரானை அடுத்து இணைந்த அனிருத்!

'பாகுபலி' நாயகன் பிரபாஸ், ஷராதா கபூர் நடிப்பில் உருவாகி வரும் பிரமாண்டமான திரைப்படம் 'சாஹோ'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது

முதல்வர் ஈபிஎஸ் கூட்டும் முக்கிய கூட்டத்தில் கமல்ஹாசன்!

முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து இன்று மாலை 5.30 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.