மனைவியுடன் சிபிராஜ் .. வைரலாகும் லேட்டஸ் புகைப்படம்

  • IndiaGlitz, [Tuesday,December 06 2022]

நடிகர் சிபிராஜ் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான சத்யராஜின் மகன் சிபிராஜ் கடந்த 2003ஆம் ஆண்டு ’ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் தந்தை சத்யராஜுடன் ஒரு சில படங்களில் நடித்த நிலையில் ’நாய்கள் ஜாக்கிரதை’ என்ற படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. சமீபத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளியான ’வட்டம்’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது அவர் இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிபிராஜ் தனது மனைவியுடன் கோவையில் நடந்த திருமண விழாவிற்கு சென்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது. மேலும் இந்த புகைப்படத்திற்கு சிபிராஜின் தங்கை திவ்யா சத்யராஜ், நடிகர் பிரசன்னா உள்பட ஏராளமானோர் லைக் செய்துள்ளனர்.

நடிகர் சிபிராஜ் கடந்த 2008ஆம் ஆண்டு ரேவதி என்ற ஐடி துறையில் பணிபுரியும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஷாருக்கானுடன் இணையும் 2 தென்னிந்திய பிரபலங்கள்.. தயாரிப்பது யார் தெரியுமா?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது 'பதான்' மற்றும் 'ஜவான்' ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அவருடைய அடுத்தப் பக்கத்தில் இரண்டு தென்னிந்திய பிரபலங்கள்

'தளபதி 67' படத்தில் விஷாலுக்கு பதில் இவரா? நேற்றைய பூஜையில் கலந்து கொண்டதாக தகவல்

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 67' படத்தின் பூஜை நேற்று நடைபெற்றதாகவும் இன்னும் ஓரிரு நாளில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. முதல் கட்டமாக இந்த படத்தின் டீசர்

சென்னையை விட்டு திடீரென கிளம்பிய ரம்யா பாண்டியன்.. என்ன காரணம்?

நடிகை ரம்யா பாண்டியன் தனது குடும்பத்துடன் சென்னையை விட்டு தனது சொந்த ஊருக்கு கிளம்பி உள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

விஜய்சேதுபதியுடன் நடிக்க விரும்பிய பிரபல நடிகையின் மகள்!

விஜய் சேதுபதியுடன் நடிக்க வேண்டும் என பிரபல நடிகையின் மகள் விருப்பம் தெரிவித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சமந்தாவின் 'யசோதா' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சமந்தா நடித்த 'யசோதா' திரைப்படம் கடந்த மாதம் 11ஆம் தேதி தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியானது என்பதும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது தெரிந்ததே.