அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் சிபிராஜ் படங்கள்!

  • IndiaGlitz, [Wednesday,March 04 2020]

நடிகர் சத்யராஜ் மகன் சிபிராஜ் நடித்து முடித்துள்ள ’வால்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 13ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது. சென்சாரில் ‘யூ’ சான்றிதழ் பெற்றுள்ள இந்த படத்தின் புரமோஷன்கள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சிபிராஜ் நடித்து வந்த இன்னொரு திரைப்படமான ’கபடதாரி’ என்ற படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்தது. இதனை அடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்த படம் வரும் மே மாதம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து இரண்டு மாதங்கள் இடைவெளியில் சிபிராஜின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிராஜ் ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்துள்ள இந்த படம் கன்னட திரைப்படம் ஒன்றின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. சிபிராஜூடன் பூஜாகுமார், நாசர், ஜெயபிரகாஷ், சதீஷ்குமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சைமன் கிங் இசையமைத்துள்ளார்.

More News

முடிவடையும் நிலையில் விஜய்சேதுபதியின் அடுத்த படம்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது ஒரே நேரத்தில் 10 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. தளபதி விஜய்யுடன் அவர் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது

மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் வாரிசு நடிகர்?

'பரியேறும் பெருமாள்' என்ற முதல் படத்திலேயே தமிழ் திரையுலகில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது தனுஷ் நடித்துவரும் 'கர்ணன்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

பொதுத்தேர்வு எழுதாமல் தப்பிக்க மாணவன் போட்ட கிட்னாப் பிளான் – கடைசியில் சொதப்பியது 

தற்போது எல்லா மாநிலங்களிலும் பொதுத்தேர்வு ஜுரம் படாய் படுத்தி வருகிறது என்றே சொல்லலாம்.

விஜய்யின் ரகசியத்தை தெரிந்தே ஆக வேண்டும்: ஹிருத்திக் ரோஷன்

பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நேற்று சென்னைக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்தார். அப்போது அவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது தனக்கு தமிழில் விருப்பமுள்ள நடிகர் தளபதி விஜய்

கிரிப்டோ கரன்சி தெரியுமா மக்களே..?! பிட் காயின் தடையை நீக்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.

கிரிப்டோ கரன்சி என்று அழைக்கப்படும் மெய்நிகர் பணமான பிட் காயின் மீதான ரிசர்வ் வங்கியின் தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.