கொரோனாவால் பாதிக்கப்பட்ட சத்யராஜ் உடல்நிலை: சிபிராஜ் டுவிட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல நடிகர் சத்யராஜ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து அவரது மகனும் நடிகருமான சிபிராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து தமிழ் திரையுலகைச் சேர்ந்த சிலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் பிரபல நடிகர் சத்யராஜ் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் அவர் படிப்படியாக குணமாகி வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் சற்று முன் நடிகர் சிபிராஜ் தனது டுவிட்டரில், ‘தனது தந்தை சத்யராஜ் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி விட்டதாகவும் அவரது உடல்நிலை தற்போது நன்றாக இருப்பதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் அவர் தனது வழக்கமான பணிகளை தொடர்வார் என்றும் தனது தந்தையை விரைவில் குணமாக வேண்டும் என வாழ்த்து தெரிவித்து பிரார்த்தனை செய்த அனைவருக்கும் தனது நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சத்யராஜ் நடித்து முடித்துள்ள ’ராதே ஷ்யாம்’ ’எதற்கும் துணிந்தவன்’ ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் அவர் நடித்துவரும் ’பார்ட்டி’ மற்றும் ’காக்கி’ ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Hey guys..Appa got discharged from the hospital last night and back home..He’s totally fine and will resume work after few days of rest..Thank you all for your love and support! ?????? #Sathyaraj
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) January 11, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com