ரஜினியை விமர்சித்தாரா சத்யராஜ்? சிபிராஜ் விளக்கம்

  • IndiaGlitz, [Wednesday,May 24 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து கடந்த வாரம் பேசியதில் இருந்து பல்வேறு தரப்பினர் அவரை விமர்சனம் செய்து கொண்டு வருகின்றனர். ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்கடிப்போம் என்று இதுவரை எந்த அரசியல் தலைவரும் கூறவில்லை. மாறாக அவர் அரசியலுக்கே வரக்கூடாது என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினி குடும்பத்துடன் கலந்து கொண்ட ஒரு பார்ட்டியின் புகைப்படத்தை பதிவு செய்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பக்கம் ரஜினியுடன் பல படங்களில் நடித்த நடிகர் சத்யராஜின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சத்யராஜின் மகன் சிபிராஜ், தனது தந்தைக்கு ஃபேஸ்புக் அக்கவுண்டே இல்லை என்றும் இந்த பக்கம் அவரது பெயரால் ஆரம்பிக்கப்பட்ட போலி பக்கம் என்றும் ரசிகர்கள் இதுகுறித்து ஃபேஸ்புக் நிர்வாகத்திற்கு புகார் செய்யவும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சத்யராஜின் பெயரில் ரஜினி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அந்த மர்ம நபருக்கு நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.