இளைஞர்களை ஊக்குவிக்க விஜய் தவறியதே இல்லை: சிபிராஜ்

  • IndiaGlitz, [Friday,December 15 2017]

சிபிராஜ் நடித்த 'சத்யா' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்று திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த படத்தில் நடித்த சிபிராஜை விஜய் உள்பட கோலிவுட் திரையுலகினர் பாராடினர் என்பது தெரிந்ததே. மேலும் 'நாய்கள் ஜாக்கிரதை' படத்திற்கு பின்னர் சிபிராஜூக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.,

இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றிவிழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், இயக்குநர் பிரதீப் கிருஷ்ண மூர்த்தி, இசையமைப்பாளர் சைமன் K கிங் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் சிபிராஜ் பேசியதாவது: 'சத்யா' திரைப்படத்தின் பத்திரிகையாளர்  ஷோ முடிந்த பின்னர் அனைவரும் என்னுடைய நடிப்பை பற்றியும் , படத்தை பற்றியும் என்ன சொல்வார்கள் என்று பயத்தோடு இருந்தேன். அனைவரும் பாசிடிவாக கூறியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. என்னுடைய நடிப்பை கேலி செய்து படத்தில் ஒரு வசனம் வரும். ஆனால் படத்தை ரசிகர்கள் அனைவரும் பார்த்து முடிக்கும் போது அனைவரும் என்னுடைய நடிப்பை பாராட்டினார்கள். ஒவ்வொரு விமர்சனமும் என்னை ஊக்குவிக்கும் வகையில் இருந்தது. 

தெலுங்கில் ஷணம் படத்தில் எழுதி நடித்த ஆத்விஷேஷ் இங்கு வந்துள்ளார். ஆத்விசேஷ் தெலுங்கில் நடித்த ஷணம் படத்தை நாங்கள் தமிழில் ரீமேக் செய்திருந்தோம். வருங்காலத்தில் அவர் தெலுங்கில் நடிக்கும் படத்தை தமிழில் நான் ரீமேக் செய்யும் ஆவலில் இருக்கிறேன். அதே போல் நான் தமிழில் நடிக்கும் படத்தை அவர் தெலுங்கில் ரீமேக் செய்வேன் என்று கூறியுள்ளார். ஆத்விசேஷும் நானும் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளோம். எனக்கும் தெலுங்கில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. விஜய் அண்ணா “ சத்யா “ படத்துக்கு நல்ல விமர்சனம் வருவதை பார்த்து என்னை போனில் அழைத்து பாராட்டினார். மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் விஜய் அண்ணா எப்போதும் இளைஞர்களை ஊக்குவிக்க தவறுவதில்லை' என்று கூறினார்.

இதே விழாவில் நடிகை வரலட்சுமி பேசியபோது, 'சத்யா திரைப்படத்துக்கு நல்ல விமர்சனங்களை கொடுத்த அனைத்து பத்திரிகையாளர் , தொலைக்காட்சி மற்றும் இணையதள நண்பர்களுக்கு நன்றி. சேவ் சக்தி அமைப்பு விஷயமாக தான் நான் முதல்வரை சந்தித்தேன். நான் அரசியலில் இணைய போகிறேனா என்று அனைவரும் கேட்கிறார்கள். கண்டிப்பாக இப்போது நான் அரசியலில் சேரவில்லை. அப்படி நான் அரசியலுக்கு வரும் போது அதை பற்றி உங்களிடம் தனியாக பிரஸ் மீட் வைத்து தெரிவிக்கிறேன். என்னுடைய தந்தையின் பார்டியில் கூட நான் இணையவில்லை. நான் இப்போதைக்கு சத்யா சக்சஸ் பார்டியில் தான் உள்ளேன். இந்த வருடத்தில் விக்ரம் வேதா, சத்யா என எனக்கு இரண்டு வெற்றி படங்கள் உள்ளது மகிழ்ச்சி' என்று கூறினார்.
 

More News

ரியல் தீரன் குடும்பத்தினர்களுக்கு ரீல் தீரன் ஆறுதல்

சென்னை கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்த கும்பலை பிடிக்க ராஜஸ்தான் சென்ற தனிப்படையில் இருந்த பெரியபாண்டியன் சமீபத்தில் ராஜஸ்தான் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பொங்கல் விருந்தாக வெளிவருமா சீயான் விக்ரமின் 'ஸ்கெட்ச்'?

விக்ரம் நடிப்பில் விஜய்சந்தர் இயக்கி வந்த 'ஸ்கெட்ச்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

அரசியலில் கமல் இன்னொரு சிவாஜியாக மாறக்கூடும்: தமிழருவி மணியன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிசம்பர் 26 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திப்பது உறுதியாகியுள்ளது. இந்த ஆறுநாட்களிலும் தகுந்த பாதுகாப்பு தேவை

ரஜினியின் 2ஆம் கட்ட ரசிகர்கள் சந்திப்பு தேதி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை முதல்கட்டமாக கடந்த மே மாதம் சந்தித்தார். அப்போது அரசியல் வருகை குறித்து 'போர் வரும்போது பார்த்து கொள்ளலாம்' என்றும் தெரிவித்தார்.

மற்ற ஹீரோக்களில் இருந்து சிவகார்த்திகேயன் வேறுபடுவது எதில்? நடிகர் சார்லி

நடிகர் சார்லி கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி குணசித்திர கேரக்டர்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என்பது தெரிந்ததே.