சிபிராஜின் 2ஆம் பாக திரைப்படம்.. பான் இந்தியா படமாக்க திட்டம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிபிராஜ் நடித்த வெற்றி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கும் நிலையில் இந்த படத்தை பான் இந்தியா திரைப்படமாக உருவாக்க பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்
கடந்த 2016 ஆம் ஆண்டு சிபிராஜ் நடிப்பில் தரணிதரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’ஜாக்சன் துரை'. சிபிராஜ், சத்யராஜ் உள்பட பலர் நடித்த இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது ஏழு ஆண்டுகளுக்கு பின் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க படக்குழு என திட்டமிட்டுள்ளது.
முதல் பாகத்தை இயக்கிய தரணிதரன் இரண்டாம் பாகத்தையும் இயக்க இருப்பதாகவும் இந்த படத்திலும் சிபிராஜ் மற்றும் சத்யராஜ் இணைந்து நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சித்தார்த் விபின் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் சிபிராஜ் படங்களிலேயே இந்த படம் தான் பெரிய பட்ஜெட் படம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு சத்யராஜ் மற்றும் சிபிராஜ் இணைந்து நடிக்க இருக்கும் இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Happy to join hands with Appa and my Lucky team again for..
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) February 20, 2023
JACKSON DURAI
The Second Chapter
BIGGER AND STRONGER!
Written and directed by@Dharanidharanpv
Produced by@SriGreen_Offl #Sathyaraj @samyukthavv
@sidvipin #JDsecondchapter pic.twitter.com/GcD94hoOQK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com