சிபிராஜ் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,October 24 2019]

பிரபல நடிகர் சத்யராஜ் மகனும் நடிகருமான சிபிராஜ் தற்போது ’மாயோன்’, ’வால்டர்’ ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் சிபிராஜ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தியையும், இந்த படம் ’காவுல்தாரி’ என்ற கன்னட படத்தின் தமிழ் ரீமேக் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இதன்படி இந்த படத்திற்கு ‘கபடதாரி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா நாயகியாக நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த ’புலி’, விஜய்சேதுபதி நடித்த ’இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ உள்பட பல தமிழ்ப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில், சைமன்கிங் இசையில், ராசாமதி ஒளிப்பதிவில் ப்ரவீண் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 1ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

More News

இதற்கெல்லாம் விஜய் பயப்படக்கூடாது: பிகில் விவகாரம் குறித்து சீமான்

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் இன்று இரவு வெளிநாடுகளிலும் நாளை காலை இந்தியாவிலும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில்

அதிகாலை சிறப்புக்காட்சி குறித்து அமைச்சரின் அதிரடி டுவீட்

விஜய் நடித்த 'பிகில்' மற்றும் கார்த்தி நடித்த 'கைதி' ஆகிய திரைப்படங்கள் வரும் 25ஆம் தேதி தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ள நிலையில் இந்த இரு படங்களுக்கும் சிறப்பு காட்சிகள் திரையிட

காஜல் அகர்வால், சமந்தா, அமலாபால் பாணியில் யோகிபாபு

கோலிவுட் திரையுலகில் முன்னணி பிரபலங்கள் தற்போது திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி வெப்சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தமிழக அரசுக்கு பிகில் தயாரிப்பு நிறுவனம் கடிதம்!

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் ரிலீசாக நாட்கணக்கில் காத்திருந்த நிலை மாறி தற்போது மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது

இனி டிராபிக் பிரச்சனை இல்லை: அறிமுகமாகிறது பறக்கும் டாக்ஸி

பேருந்து, கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்ன்கள் என சாலை வழியாக எந்த வாகனத்தில் சென்றாலும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றடைய முடியாது.