கட்டப்பா கேரக்டரை கையில் எடுத்த சிபிராஜ்

  • IndiaGlitz, [Friday,June 10 2016]

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று ரூ.600 கோடிக்கும் மேல் சம்பாதித்தது. முதல் பாகத்தை பார்த்த அனைவரும் கண்டிப்பாக இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பார்ப்பார்கள். ஏனெனில் 'பாகுபலியை கட்டப்பா ஏன் கொலை செய்தார்? என்பதை தெரிந்து கொள்ளாமல் யாராலும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு நடிகர் சத்யராஜ் நடித்த இந்த கட்டப்பா கேரக்டர் அனைவரின் மனதிலும் தங்கிவிட்டது.

இந்நிலையில் உலகம் முழுவதும் புகழ்பெற்ற இந்த கட்டப்பா கேரக்டரை சத்யராஜின் மகன் தற்போது கையில் எடுத்துள்ளார். ஆம் சிபிராஜ் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு 'கட்டப்பாவை காணோம்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

'ஜாக்சன் துரை' படத்தை அடுத்து இயக்குனர் மணி இயக்கத்தில் சிபிராஜ் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்குத்தான் 'கட்டப்பாவை காணோம்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கட்டப்பா பெயரை பயன்படுத்தியிருந்தாலும் அந்த கேரக்டரை நாங்கள் எந்த விதத்திலும் மிஸ்யூஸ் பண்ண மாட்டோம் என்று இயக்குனர் உறுதியுள்ளார்.

இந்நிலையில் சிபிராஜின் 'ஜாக்சன் துரை' படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு 'கட்டப்ப ராஜூ' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More News

'சபாஷ் நாயுடு' இயக்குனர் மாற்றமா?

உலக நாயகன் கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் தொடங்கியது...

ரஜினியுடன் இணைந்த பிரபல விமான நிறுவனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் பாடல்கள் வரும் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் இந்த படம் ஜூலை 15ஆம் தேதிக்கு மேல் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது...

அச்சம் என்பது மடமையடா' டிராக்லிஸ்ட் வெளியீடு

சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்...

'உறியடி'யை மீண்டும் ரிலீஸ் செய்ய இயக்குநர் விஜயகுமார் வேண்டுகோள்

சமீபத்தில் வெளிவந்த 'உறியடி' திரைப்படம் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வெளிவந்தாலும் விமர்சகர்கள் தந்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக படம் நல்ல ரிசல்ட்டை தந்தது. கடந்த மே 27ஆம் தேதி வெளியான இந்த படம் ஒருசில நாட்களில் சில திரையரங்குகளில் காட்சிகள் அதிகரித்தும் சில திரையரங்க வளாகத்தில் பெரிய திரையரங்குகளிலும் திரையிடப்பட்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' பர்ஸ்ட்லுக் வெளியாவது எப்போது? புதிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படம் வரும் ஜூலையில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவர் நடித்து வரும் மற்றொரு படமான '2.0' படத்திற்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் மேக்கப் டெஸ்ட் செய்துள்ளார் என்பதை சற்று முன்னர் பார்த்தோம்.