கமல்ஹாசன் கருத்துக்கு 14 வருடங்கள் கழித்து பதில் சொன்ன படக்குழு!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னர் கூறிய ஒரு கருத்துக்கு தற்போது படக்குழுவினர் பதில் சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் இன்று வெளியாகி உலகம் எங்கும் சக்கைபோடு போட்டு வருகிறது. இந்த நிலையில் ’விக்ரம்’ திரையிடப்பட்ட பல திரையரங்குகளில் சிபிராஜ் நடித்த ’மாயோன்’ படத்தின் டிரெய்லரும் வெளியாகி உள்ளது
இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்த ’தசாவதாரம்’ என்ற படத்தில் ’கடவுள் இல்லனு சொல்லல, இருந்தா நல்ல இருக்கும்ன்னு சொல்கிறேன்’ என்று வசனம் பேசியிருப்பார். இந்த வசனம் மிகப் பெரிய அளவில் பிரபலமாகி உள்ள நிலையில் கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு ’மாயோன்’ படம் மூலம் பதில் கூறி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் கூறியிருப்பதாவது: ‘தசாவதாரம்’ படத்தில் ’கடவுள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்’ என்று கமல் வசனம் பேசிய நிலையில் அவருடைய அந்த வசனத்திற்கு 14 வருடங்களுக்கு பிறகு ’மாயோன்’ படத்தில் பதில் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் ’மாயோன்’ திரைப்படம் சொல்ல வருவது என்ன? படத்தில் அப்படி என்ன இருக்கிறது? என்பது குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
"KADAVUL IRUNDHA NALLA IRUKUM" 14 years long question of #Ulaganayagan. His question has finally been answered. #Maayon has decided to show up with #Vikram Theatrical TRAILER of Maayon FROM June 3rd.#Andavar @ManickamMozhi @ilaiyaraaja @Sibi_Sathyaraj @actortanya #KSRavikumar pic.twitter.com/DX7cxRHXnD
— Double Meaning Production (@DoubleMProd_) June 1, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments