கவுதம் மேனனுடன் இணைந்த சிபிராஜ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சத்யராஜ் நடித்த 'வால்டர் வெற்றிவேல்' திரைப்படம் கடந்த 1993ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான நிலையில் தற்போது அவரது மகன் சிபிராஜ் 'வால்டர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது இயக்குனர் கவுதம் மேனன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இதே படத்தில் சமுத்திரக்கனியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இந்த தகவலை சிபிராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளார். கவுதம் மேனன் அவர்களுடனும், சமுத்திரக்கனி அவர்களுடனும் இணைந்து பணியாற்றிவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
சிபிராஜ் ஜோடியாக ஷிரின் கான்ச்வாலா நடித்து வரும் இந்த படத்தை அன்பு என்ற புதுமுக இயக்குனர் இயக்கி வருகிறார்.
Happy and proud to be working with @menongautham sir and @thondankani sir for #Walter! @IAmAnbu5 @prabhuthilaak pic.twitter.com/E2390MUtAU
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) June 28, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments