சிபிராஜின் 'ஜாக்சன் துரை' டிராக்லிஸ்ட்

  • IndiaGlitz, [Monday,March 14 2016]
சிபிராஜ் நடித்த 'ஜாக்சன் துரை' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளீவந்த நிலையில் இந்த படத்தின் டிராக்லிஸ்ட் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் ஆல்பத்தில் நான்கு பாடல்களும் இரண்டு கரோக்கிகளும் உள்ளது.

சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இந்த படத்தின் நான்கு பாடல்களில் மூன்று பாடல்களை இந்த படத்தின் இயக்குனர் தரணிதரன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


1. மோட்டார் பைக்' என்று தொடங்கும் முதல் பாடலை ஆண்டனிதாசன் பாடியுள்ளார்.
2. ஏதேதோ' என்று தொடங்கும் இரண்டாவது பாடலை மோகன்ராஜன் என்பவர் எழுத அதை கார்த்திக் மற்றும் சின்மயி பாடியுள்ளனர்.
3. ஜாக்சன் துரை என்ற மூன்றாவது பாடலை கானாபாலா பாட்யுள்ளார்.
4. மோட்டார் பைக் என்னும் ரீமிக்ஸ் பாடலை ஆண்டனிதாசன் பாடியுள்ளார்

சிபிராஜ், பிந்துமாதவி, சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தரணீதரன் இயக்கியுள்ளார். சத்யராஜ் மற்றும் சிபிராஜ் நடிக்கும் முதல் பேய்ப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.