சிபிராஜின் 'சத்யா' பிரஸ்மீட்: சில துளிகள்

  • IndiaGlitz, [Saturday,December 02 2017]

சிபிராஜ், வரலட்சுமி சரத்குமார், ரம்யாநம்பீசன், ஆனந்த்ராஜ், சதீஷ் உள்பட பலர் நடிப்பில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சத்யராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'சத்யா'. இந்த படம் வரும் 8ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இன்று இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் சத்யராஜ், சிபிராஜ், ஆனந்த்ராஜ் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பேசினர். 

சத்யராஜ்: பாகுபலி படப்பிடிப்பில் இருந்தபோது நடிகர் பிரபாஸிடம் தெலுங்கில் வெளியான Kshanam படத்தை தமிழில் சிபிராஜ் நடிப்பில் ரீமேக் செய்யவுள்ளதாக கூறினேன். அவர் அதற்கு சரியான சாய்ஸ், அந்த படத்தில் கதை தான் ஹீரோ என்று கூறினார். அப்போதே எனக்கு இந்த படம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. 

சிபிராஜ்: இந்த படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு 'சத்யா' என்ற டைட்டில் ஒரு முக்கிய காரணம். இந்த படத்தின் டைட்டிலை கொடுத்து உதவிய கமல்ஹாசன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இது ஒரு ரீமேக் படமாக இருந்தாலும் இந்த படத்திற்காக இயக்குனர் பிரதீப் கடுமையாக உழைத்துள்ளார். அவர் இயக்கத்தில் இன்னொரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ரம்யா நம்பீசன்: இந்த படத்தில் பல திகில் காட்சிகள் மற்றும் திடுக்கிடும் திருப்பங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும். இப்படி ஒரு அருமையான டீமுடன் பணிபுரிந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி


மேலும் இந்த நிகழ்ச்சியில் மதன்கார்க்கி, ஆனந்த்ராஜ் உள்பட பலர் பேசினர்