லாக்டவுன் தளர்வில் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியை ஆரம்பித்த முதல் தமிழ் திரைப்படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17ம் தேதி வரை அமலில் உள்ளது. இந்த நிலையில் இந்த ஊரடங்கின்போது தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்த நிலையில் திரைப்படத் துறையினருக்கும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என திரைத்துறையினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் செய்தி மக்கள் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களும் ஒரு சில நிபந்தனைகளுடன் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியை தொடர அனுமதித்தனர். இதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சார்பில் தமிழக அரசுக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அரசு கொடுத்த தளர்வின் அடிப்படையில் தற்போது கோலிவுட்டில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக சிபிராஜ் நடித்த ’கபடதாரி’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று தொடங்கி உள்ளன. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் ஜெயபிரகாஷ் இன்று தனது கேரக்டருக்கான டப்பிங் பணியை செய்தார். தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் தனிமனித இடைவெளியை பின்பற்றி இந்த டப்பிங் பணிகள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மற்ற படங்களின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Happy to get back to #PostProduction of @Sibi_Sathyaraj 's #Kabadadaari with dubbing by #JP sir, following proper regulations. Now will progress towards finish soon. Thank you Govt.of TN for the approval ?????????? pic.twitter.com/3dvLlCBXB3
— Dr. Dhananjayan BOFTA (@Dhananjayang) May 11, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments