இது போலி, யாரும் நம்பாதீங்க: பதறியபடி அறிவிப்பு வெளியிட்ட சிபிராஜ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிபிராஜ் பெயரில் வெளிவந்த விளம்பரம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருவதை அடுத்து அந்த விளம்பரத்தை தான் கொடுக்கவில்லை என்றும் அது முழுக்க முழுக்க போலியான விளம்பரம் என்றும் சிபிராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
சிபிராஜ் நடிக்கும் திரைப்படம் ஒன்றுக்கு 18 முதல் 28 வரை வயதுள்ள ஹீரோயின் தேவை என்றும் நண்பர்களாக நடிப்பதற்கு 20 முதல் 28 வயதுக்குள் இருக்கும் நபர்கள் தேவை என்றும் மேலும் துணை நடிகைகளும் தேவை என்று அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டு, அந்த விளம்பரம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்ப வேண்டும் என்றும் அறிவித்து, ஒரு மொபைல் எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விளம்பர புகைப்படம் மிகப்பெரிய வைரலாகி வரும் நிலையில் இது குறித்து தனது கவனத்திற்கு வந்தவுடன் சிபிராஜ் விளக்கம் அளித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த விளம்பர புகைப்படம் எனது கவனத்திற்கு இப்போது தான் வந்தது. இது போலியான விளம்பரம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. யாரும் இந்த விளம்பரத்தை நம்பி ஏமாற வேண்டாம். இதற்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. தயவு செய்து இதற்கு இதனை நம்பி ஏமாற வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.
Dear friends. It has come to my notice that this picture has been doing the rounds on social media last few days.I wish to clarify that this is a FAKE casting call and I’m totally unaware and in no way connected to this scam.Pls do not fall Prey to this ???? pic.twitter.com/FQqfyEWebI
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) April 23, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com