சிபிராஜின் அடுத்த பட இயக்குனர் இவர்தான்

  • IndiaGlitz, [Wednesday,February 22 2017]

'நாய்கள் ஜாக்கிரதை' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆன சிபிராஜ், அதன்பின்னர் 'ஜாக்சன் துரை' படத்தில் நடித்தார். தற்போது அவர் 'கட்டப்பாவ காணோம்' மற்றும் 'சத்யா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிபிராஜின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

அசோக்செல்வன், ஜனனி ஐயர் நடித்த 'தெகிடி' படத்தை இயக்கிய ரமேஷ், சிபிராஜின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை சிபிராஜ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

சமீபகாலமாக வித்தியாசமான திரைக்கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் சிபிராஜ், இயக்குனர் ரமேஷ் கூறிய ஒன்லைன் கதை பிடித்துவிட்டதால் உடனடியாக சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்களுடன் விரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.