நீண்ட எதிர்பார்ப்பு.. ஒரு வருடத்திற்கு பின் ஓடிடியில் ரிலீஸாகும் சிபி சத்யராஜ் படம்..!

  • IndiaGlitz, [Thursday,August 10 2023]

சிபி சத்யராஜ் நடித்த ’மாயோன்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியான நிலையில் ஒரு வருடம் கழித்து நீண்ட எதிர்பார்ப்புக்கு பின்னர் நாளை ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி, கேஎஸ் ரவிக்குமார் உள்பட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ’மாயோன்’. அருள்மொழி மாணிக்கம் திரைக்கதை மற்றும் தயாரிப்பில் கிஷோர் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் உருவான இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தெலுங்கில் வெளியாகி அங்கும் நல்ல வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் விரைவில் ஓடிடியில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து தற்போது நாளை இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சிபி சத்யராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

ஏற்கனவே இந்த வாரம் சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ சரத்குமார் - அசோக் செல்வன் நடித்த ’போர் தொழில்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் ’மாயோன்’ திரைப்படமும் வெளியாவதால் ஓடிடி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் எங்களது குறிப்பிடத்தக்கது.

More News

தயவுசெய்து இதை மட்டும் செய்யாதீங்க, ப்ளீஸ்.. சினேகா வீடியோவுக்கு வேண்டுகோள் விடுக்கும் ரசிகர்கள்..!

திரை உலக மற்றும் சின்னத்திரையுலக நட்சத்திரங்கள் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார்கள் என்பது தெரிந்ததே. 

ரூ.100 கோடி வசூலை நெருங்கும் 'மாவீரன்' படத்தின் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் வசூல் ரூ.100 கோடியை நெருங்கியுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஜெயம் ரவியின் 'இறைவன்' படத்தின் முக்கிய பணி தொடக்கம்.. தள்ளி போகிறதா ரிலீஸ் தேதி?

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் 'என்றென்றும் புன்னகை' அகமது இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'இறைவன்'. இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அதில் ஆகஸ்ட் 25ஆம் தேதி ரிலீஸ் என

'ஜெயிலர்' சினிமாட்டிக் யுனிவர்ஸ் படமா? நெல்சனின் அறிக்கையால் பரபரப்பு..!

தமிழ் சினிமாவில் சினிமாட்டிக்  யுனிவர்ஸ் என்பதை அறிமுகம் செய்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்பதும் தனது முந்தைய படத்தை கேரக்டர்களை அடுத்தடுத்த படங்களில்  புத்திசாலித்தனமாக இணைத்து

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முதலாளி.. புதிய 'லியோ' ஸ்டில் உடன் தயாரிப்பாளருக்கு வாழ்த்து..!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'லியோ' திரைப்படத்தை பிரமாண்டமாக தயாரித்து உள்ள தயாரிப்பாளர் லலித் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர்