கற்பனைக்கும் அப்பாற்பட்ட அமானுஷ்யம் இருக்குது தம்பி: சிபிராஜின் 'மாயோன்' டீசர்!

  • IndiaGlitz, [Friday,October 08 2021]

தமிழ் திரை உலகின் இளம் நடிகர்களில் ஒருவரான சிபிராஜ் நடிப்பில் கிஷோர் இயக்கத்தில் உருவாகிய ‘மாயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி உள்ளது.

ஆளரவமற்ற கோவில் ஒன்றில் மர்மமான நிகழ்வுகள் நடைபெறுகிறது என்பதும் அந்த நிகழ்வுகளை கண்காணிக்க ஒரு கூட்டம் முயற்சி செய்கிறது என்பதும் அந்த கூட்டத்திற்கு என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தின் கதை என்பதும் இந்த ‘மாயோன்’ படத்தின் டீசரில் இருந்து தெரிய வருகிறது.

’கற்பனைக்கும் அப்பாற்பட்ட அமானுஷ்யங்கள் அந்த கோயிலில் இருக்குது தம்பி’ என்ற வசனத்துடன் பிரம்மாண்டமான காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த டீசரை பார்க்கும்போது இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இசைஞானி இளையராஜாவின் மிரட்டலான இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி, கேஎஸ் ரவிக்குமார், பகவதி பெருமாள், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையும், ராம் பிரசாத் ஒளிப்பதிவும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது.