சண்முகப்பாண்டியன் கையில் அடங்கிய விஜயகாந்த் கண்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
திரைத்துறையில் 40 ஆண்டுகாலம் சேவை செய்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு சமீபத்தில் விழா எடுக்கப்பட்டது. இந்த விழாவில் பிரபல இயக்குனர்கள் உள்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் விஜயகாந்த மகனும், நடிகருமான சண்முகப்பாண்டியன் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் அங்கிருந்தே தனது தந்தைக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதுமட்டுமின்றி விஜயகாந்தின் கண்கள் டாட்டூவை அவர் தனது கையில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள வீடியோவில் கூறியதாவது:
அப்பாவின் 40 ஆண்டு கலைவிழாவில் கலந்து கொள்ள முடியாததற்கு வருத்தப்படுகிறேன். எனக்கு தெரிந்தவரை அப்பா மட்டும்தான் தமிழில் 150 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். பல நடிகர்கள் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், அவர்கள் பல்வேறு மொழிகளில் நடித்துள்ளனர்.
அப்பாவை பொருத்தவரையில் அனைவருக்கும் பிடித்த விஷயமே அவருடைய கண்கள் தான். எனவே அவருடைய கண்களை நான் என் கைகளில் டாட்டுவாக வரைந்துள்ளேன். அவருடைய பேசும் கண்கள் நான் உயிருள்ளவரை என்னுடன் இருக்கும் என்பது எனக்கு பெருமையே
இந்த டாட்டூவை நான் லண்டனில் உள்ள ஒரு மிகப்பெரிய டாட்டூ கலைஞரிடம் போட்டேன். அவரே இந்த கண்களை பார்த்து ஆச்சரியம் அடைந்தார் என்று சண்முகப்பாண்டியன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com