கேப்டன் மகன் சண்முக பாண்டியன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. டைட்டில் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,October 12 2024]

கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ஒரு திரைப்படத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில், அந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில், அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சண்முக பாண்டியன் நடிப்பில், பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த படத்திற்கு கொம்பு சீவி என்ற டைட்டில் வைக்கப்பட்டு, புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. அந்த போஸ்டர் தற்போது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

கடந்த 1996-ல், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, வைகை அணை பகுதியில் நடந்த உண்மை கதைகளை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டதாக இந்த படத்தின் போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்ராம் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில், தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. சண்முக பாண்டியனுடன், இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சரத்குமார் மற்றும் சண்முக பாண்டியன் இணைந்துள்ள இந்த பர்ஸ்ட் போஸ்டர் அனைவரையும் கவர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கி விட்டதாகவும், விரைவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

'வேட்டையன்' படத்திற்கு எதிராக போராட்டம்: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவிப்பு.. என்ன காரணம்?

அரசு பள்ளி மாணவர்கள் குறித்து 'வேட்டையன்' திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி இருப்பதை அடுத்து, அந்த படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் அதிமுக அமைச்சர்

சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் பலாத்காரம்: பிரபல இயக்குனர் மீது இளம்பெண் புகார்..!

சினிமாவில் வாய்ப்பு வருவதாக கூறி, பிரபல இயக்குனர் ஒருவரும் அவருடைய நண்பரும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, இளம் பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளது

'நானும் விஜய்யும் 'வேட்டையன்' படத்தை பார்த்தோம்: வெங்கட் பிரபு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி அன்று தளபதி விஜய் பார்த்தார் என்றும் அது குறித்த

இருட்டை விரட்டுவதற்கு சூரியன் தேவையில்லை.. ஒரே ஒரு தீக்குச்சி போதும்: ஜெயம் ரவியின் அடுத்த பட அறிவிப்பு..!

நடிகர் ஜெயம் ரவி, தற்போது "ஜெனி", "பிரதர்”, 'காதலிக்க நேரமில்லை" ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில், அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு, வீடியோவுடன் வெளியாகி, இணையத்தில் வைரல்

மகிஷாசுரமர்த்தினி மந்திரம் : அயிகிரி நந்தினி பாடல் வரிகள் தமிழில் | Aigiri nandini lyrics in Tamil

அயிகிரி நந்தினி பாடல் வரிகள் தமிழில் | Aigiri nandini lyrics in Tamil