கேப்டன் மகன் சண்முக பாண்டியன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. டைட்டில் என்ன தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ஒரு திரைப்படத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில், அந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில், அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சண்முக பாண்டியன் நடிப்பில், பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த படத்திற்கு "கொம்பு சீவி" என்ற டைட்டில் வைக்கப்பட்டு, புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. அந்த போஸ்டர் தற்போது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
கடந்த 1996-ல், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, வைகை அணை பகுதியில் நடந்த உண்மை கதைகளை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டதாக இந்த படத்தின் போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொன்ராம் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில், தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. சண்முக பாண்டியனுடன், இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சரத்குமார் மற்றும் சண்முக பாண்டியன் இணைந்துள்ள இந்த பர்ஸ்ட் போஸ்டர் அனைவரையும் கவர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கி விட்டதாகவும், விரைவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகள்
— ponram (@ponramVVS) October 12, 2024
#StarCinemas @mukesh_chelliah Presents #Kombuseevi #கொம்பு சீவி @realsarathkumar #ShanmugaPandian
Dir by @ponramVVS#Tharnika #KalkiRaja @kaaliactor @balasubramaniem @thisisysr @DPonnuraj pic.twitter.com/tNUNKsDpXM
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com