'உன் முகத்தை பாக்கலையே'.. கேப்டன் மகன் சண்முக பாண்டியன் மகன் படத்தின் அப்டேட்..!
- IndiaGlitz, [Monday,December 02 2024]
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்து வரும் படைத்தலைவன் என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சண்முகபாண்டியன் ஹீரோவாக நடித்து வரும் படைத்தலைவன் படத்தில் கஸ்தூரிராஜா, யாமினி சந்தர், முனீஸ்காந்த், கருடன் ராம், ரிஷி, ஏ. வெங்கடேஷ், யூகிசேது உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அன்பு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் சிங்கிள் பாடல் உன் முகத்தை பாக்கலையே , இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இசைஞானி இளையராஜா கம்போஸ் செய்த இந்த பாடலை அனன்யா பட் என்பவர் பாடியுள்ளார். மேலும், இளையராஜாவே இந்த பாடலின் வரிகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சோகமான மெலடி பாடலாக அமைந்திருக்கும் இந்த பாடலை முதல் முறை கேட்கும் போதே அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி உள்பட அனைத்து விவரங்களையும் விரைவில் படக்குழுவினர் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.