சண்முகப்பாண்டியனின் 'மதுரவீரன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள மண்ணின் மனத்துடன் கூடிய 'மதுரவீரன்' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத காரணத்தால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இந்த படம் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.
சண்முகப்பாண்டியன், மீனாட்சி, சமுத்திரக்கனி, வேலராமமூர்த்தி, பாலசரவணன், ஜி.மாரிமுத்து, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவில், ப்ரவீண் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை வி ஸ்டுடியோஸ் மற்றும் பிஜி மீடியா ஒர்க்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. ஜல்லிக்கட்டு சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்ட இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com