தல 56' படப்பிடிப்பில் அஜீத்தை புகழ்ந்து தள்ளிய ஸ்ருதி

  • IndiaGlitz, [Monday,July 13 2015]

சமீபத்தில் இளையதளபதி விஜய்யுடன் 'புலி' படத்தில் நடித்து முடித்துள்ள ஸ்ருதிஹாசன் தற்போது அஜீத்துடன் 'தல 56' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு குறித்தும், அஜீத் குறித்தும் ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் சில கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.


என்னை கவர்ந்த என்னுடன் நடித்த சக நடிகர்களில் அஜித் சார் குறிப்பிட்டு சொல்லத்தக்கவர். அவருடைய சமையல்கலை மற்றும் புகைப்படக்கலை ஆகியவற்றை பார்த்து வியப்பது மட்டுமின்றி, அவருடன் பேசிக்கொண்டிருந்தால் பல புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளும் அளவுக்கு அவர் திறமையுள்ளவர் என்பதை புரிந்து கொண்டேன்.

ஒரு கைதேர்ந்த போட்டோகிராபராக மாறி என்னை விதவிதமாக படமெடுத்த அஜீத் சார் அவர்களுக்கு என்னுடைய மிகப்பெரிய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவருடன் இணைந்து இந்த படத்தில் பணிபுரிவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

புலி மற்றும் 'அஜீத் 56' படங்களை தவிர ஸ்ருதிஹாசன் ஸ்ரீமந்துடு, வெல்கம் பேக், யாரா, ராக்கி ஹேண்ட்சம் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் சூர்யாவின் சிங்கம் 3 படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.

More News

இறுதி நாள் படப்பிடிப்பில் பிணமாக நடித்த பெண் இயக்குனர்

ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனரும் குணசித்திர...

பெங்களூர் டேய்ஸ் ரீமேக் படத்தின் டைட்டிலுக்கு சிக்கலா?

மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்கான 'பாபநாசம்' வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது போல், இன்னொரு சூப்பர் ஹிட் மலையாள படமான பெங்களூர் டேய்ஸ்' படத்தின் ரீமேக் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபிசிம்ஹா, ராணா, பார்வதி, ராய்லட்சுமி மற்றும் சிறப்பு தோற்றத்தில் நய

இரண்டே நாட்களில் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது பாகுபலி

இந்திய திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் தற்போது ரூ.100 கோடி வசூல் செய்யும் படங்கள் அதிகரித்து வந்தபோதிலும், கடந்த வெள்ளியன்று ரிலீஸாகிய எஸ்.எஸ்.ராஜமவுலியின் பாகுபலி திரைப்படம், இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து, இதுவரை இந்தியாவில் வெளிவந்த படங்களில் மிக வேகமாக ரூ.100 கோடி வசூல் செய்த படம் என்ற சாதனையை பெற்றுள்ளது......

பேயாக நடிக்கும் பேயை ஓட்டிய நடிகர்

ஜி.வி.பிரகாஷ் நடித்த 'டார்லிங்' படத்தில் பேய் ஓட்டுபவராக கலக்கலான நடிப்பை கொடுத்து பெரும் பாராட்டுக்களை பெற்ற...

ஒரே நாளில் ரிலீஸாகும் சமந்தாவின் இரண்டு படங்கள்

விக்ரம் நடித்து வந்த '10 எண்றதுக்குள்ள' படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் அந்த படத்தின் கிளைமாக்ஸின் முந்தைய...