வெறித்தனமான பஞ்ச்… முன்னணி நடிகையின் பாக்சிங் வீடியோ மீண்டும் வைரல்!

  • IndiaGlitz, [Friday,August 20 2021]

உலகநாயகன் நடிகர் கமல்ஹாசனின் மகளும் முன்னணி நடிகையுமான ஸ்ருதிஹாசன் சமீபத்தில் பாக்சிங் கற்றுக்கொள்வதைப் போன்ற வீடியோவை பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவில் கத்துக்குட்டியைப் போன்று நிதானமாக பாக்சிங் செய்த நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது வெறித்தனமாக அசராமல் பஞ்ச் வைக்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகை ஸ்ருதிஹாசன் கடந்த 2009 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான “லக்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானர். பின்னர் தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியானி “7 ஆம் அறிவு” திரைப்படத்தில் அறிமுகமான அவர் முன்னணி நடிகர்களான நடிகர் அஜித், விஜய், விஷால் எனப் பல்வேறு நட்சத்திரங்களுடன் நடித்துவிட்டார்.

தற்போது நடிகர் விஜய்சேதுபதியுடன் “லாபம்” திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது. கூடவே “பாகுபலி” பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் “சலார்“ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் எடுக்கப்பட்டு பின்னர் தமிழ், மலையாளம், இந்தி மொழிகளில் டப் செய்யப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தன்னுடைய காதலருடன் மும்பையில் வசித்துவரும் நடிகை ஸ்ருதிஹாசன் படு வேகமாக பாக்சிங் கற்றுக்கொண்டு வருகிறார். அவர் தன்னுடைய பயிற்சியாளருடன் பயிற்சி எடுத்துக்கொள்ளும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.