17 வயதில் மாடலிங் செய்த உலகநாயகன் மகள்… இணையத்தைக் கலக்கும் க்யூட் புகைப்படம்!

  • IndiaGlitz, [Monday,August 30 2021]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மற்றும் இளைய மகள்கள் இருவருமே தற்போது நடிப்பு துறையில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். அந்த வகையில் மூத்த மகளான நடிகை ஸ்ருதிஹாசன் கடந்த 2009 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான “லக்” எனும் திரைப்படம் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானார்.

அடுத்து தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “7ஆம் அறிவு” திரைப்படத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார். இதைத்தவிர நடிகர் தனுஷ்ஷுடன் “3”, நடிகர் விஷாலுடன் “பூஜை”, நடிகர் விஜய்யுடன் “புலி”, தல அஜித்துடன் “வேதாளம்” திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி இடத்தைப் பிடித்தார்.

நடிப்பைத் தவிர நிறைய பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார். தற்போது தமிழில் நடிகர் விஜய்சேதுபதியுடன் “லாபம்” திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். அதேபோல தெலுங்கில் பாகுபலி புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் “சலார்” படத்தில் நடித்து வருகிறார்.

 

மேலும் தெலுங்கில் சமீபத்தில் வெளியான “பிட்டகத்தலு” எனும் அந்தலாஜி திரைப்படத்தில் நடித்து இருந்தார். நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரேவேற்பை பெற்றது. இப்படி சினிமாவில் பிசியான நடிகையாக இருந்துவரும் இவர் டூடுல் கலைஞரான சாந்தனு என்பவரை காதலித்து வருவதோடு மும்பையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் உலகநாயகனின் மகள், மற்றும் தமிழ் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை ஸ்ருதிஹாசன் தன்னுடைய 17 வயதிலேயே மாடலிங் செய்த புகைப்படத்தை தன்னுடைய சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு உள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது படு வைரலாகி வருகிறது.